பிரியங்கா சோப்ரா முதல் கிரித்தி சனோன் வரை: தயாரிப்பாளர்களாக மாறிய பாலிவுட் நடிகைகள்


From Kriti Sanon, Anuskha Sharma to Priyanka Chopra: Female Bollywood actors who have turned producers
x

கிரித்தி சனோன், ஆலியா பட், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நடிகைகள் தயாரிப்பில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்.

மும்பை,

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக தங்களை நிலைநிறுத்திக்கொண்ட நடிகைகள் இயக்குனர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் தங்களை நிரூபிக்க துவங்கி இருக்கின்றனர்.

அந்தவகையில் , கிரித்தி சனோன், ஆலியா பட், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நடிகைகள் தயாரிப்பில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு தயாரிப்பாளர்களாக மாறிய நடிகைகளையும், அவர்கள் தயாரித்த படங்களையும் தற்போது காண்போம்.

'பிரியங்கா சோப்ரா'

உலகளவில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் நிறுவனத்தை துவங்கி படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி, தேசிய விருது பெற்ற மராத்தி திரைப்படமான வென்டிலேட்டர், பஹுனா, பயர்பிரான்ட் மற்றும் பான் ஆகிய படங்களை இவர் தயாரித்துள்ளார்.

'கங்கனா ரனாவத்'

மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற நிறுனத்தை துவங்கி தயாரிப்பு உலகில் கால் பதித்தவர் கங்கனா ரனாவத். இவர் நவாசுதீன் சித்திக் மற்றும் அவ்னீத் கவுர் நடிப்பில் வெளியான 'திக்கு வெட்ஸ் ஷேரு' படத்தை தயாரித்திருக்கிறார்.

'தீபிகா படுகோன்'

'சபாக்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் தீபிகா படுகோன். அதனைத்தொடர்ந்து, 83 படத்தையும் தயாரித்திருக்கிறார்.

'அனுஷ்கா சர்மா'

அனுஷ்கா சர்மா 'கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் தயாரித்த முதல் படம் 'என்எச்10'. அதைத் தொடர்ந்து பில்லாரி மற்றும் பரி ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார்.

'ஆலியா பட்'

'டார்லிங்ஸ்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆலியா பட். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து ஆலியா பட் இப்படத்தை தயாரித்திருந்தார்

'டாப்சி'

வலுவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர் டாப்சி. இவர் கடந்த 2021 இல் அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 2022-ம் ஆண்டு வெளியான 'பிளர்' இவர் தயாரித்த முதல் படமாகும்.

'கிரித்தி சனோன்'

புளூ பட்டர்பிளை பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பில் அடி எடுத்து வைத்தவர் கிரித்தி சனோன். அவர் தயாரித்த முதல் படம் 'தோ பட்டி'. இதில், கிரித்தி சனோன், கஜோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


1 More update

Next Story