

சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் வெளியான ரஜினிகாந்தின் திரைப்படங்களின் வரிசையில் ‘ஜெயிலர் 2’ படமும் இணைந்துள்ளது.
அந்த வகையில், 1976-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி ‘மூன்று முடிச்சு’ திரைப்படம் வெளியானது. தொடர்ந்து, 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி ‘ஜான் ஜானி ஜனார்தன்’, 1987-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி ‘மனிதன்’, 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி ‘முத்து’ ஆகிய படங்கள் வெளியாகின.
கடந்த 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி வெளியான ‘வேட்டையன்’ திரைப்படமும் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் மூலம், அக்டோபர் மாதத்தில் வெளியான ரஜினிகாந்தின் திரைப்படங்களின் வரிசையில் புதிய படமாக ‘ஜெயிலர் 2’ இணைகிறது. இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.