’ஓ ரோமியோ’ முதல் ’ஸ்பிரிட்’ வரை: 2026-ல் திரிப்தி டிம்ரியின் ஆதிக்கம்

சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் (2023) திரைப்படம் திரிப்திக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.
சென்னை,
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிப்தி டிம்ரி. பாலிவுட்டில் பல வருடங்களாக இவர் நடித்து வந்தாலும் சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் (2023) திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. அதில் திரிப்தி டிம்ரியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
அப்படத்திற்குப் பிறகு, திரிப்திக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “ஸ்பிரிட்” படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். சமீபத்தில் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
பாலிவுட்டில், ஷாஹித் கபூருக்கு ஜோடியாக “ஓ ரோமியோ” படத்திலும் திரிப்தி நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இது தவிர, மற்றொரு இந்தி படமும் அவர் கையில் உள்ளது. இதன் மூலம் 2026-ம் ஆண்டில் திரிப்தி டிம்ரியின் ஆதிக்கம் அதிக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.






