2025-ம் ஆண்டில் இதுவரை...வேகமாக ரூ.100 கோடி வசூலித்த பாலிவுட் படங்கள்


From Saiyaara to Chhaava: Fastest Rs 100 crore Bollywood movies of 2025
x
தினத்தந்தி 22 July 2025 9:30 PM IST (Updated: 22 July 2025 9:30 PM IST)
t-max-icont-min-icon

2025-ம் ஆண்டில் சயாரா , சாவா போன்ற படங்கள் ரூ. 100 கோடியை மிக விரைவாக வசூலித்து சாதனை படைத்திருக்கின்றன.

சென்னை,

2025-ம் ஆண்டில், பல பாலிவுட் படங்கள் மின்னல் வேகத்தில் ரூ. 100 கோடி மைல்கல்லை எட்டியுள்ளன. இதில், சயாரா மற்றும் சாவா ஆகியவையும் அடங்கும். இவை இரண்டும் வேறுபட்ட கதையை கொண்ட படங்களாக இருந்தபோதிலும், பார்வையாளர்களை கவர்ந்து, வெளியான சில நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூலைத் தாண்டின.

''சாவா''

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சாவா. பிப்ரவரி 14-ம் தேதி வெளியான இந்த பிரமாண்டமான வரலாற்று படம் மூன்று நாட்களில் ரூ. 100 கோடியைத் தாண்டியது. இப்படத்தில் விக்கி கவுசல் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

''சயாரா''

சயாரா திரைப்படம் 4 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை தாண்டியது. புதுமுகங்கள் நடித்திருந்த ஒரு படத்திற்கு இத்தகைய வரவேற்பு கிடைப்பது மிகவும் அரிதான விஷயமாகும். பல பெரிய பட்ஜெட் படங்களின் வாழ்நாள் வசூலையும் இப்படம் முறியடித்தது.

''ஹவுஸ்புல் 5''

ரூ.100 கோடி வசூலை விரைவாக ஈர்த்து இந்த பட்டியலில் இடம்பிடித்த மற்றொரு படம் ஹவுஸ்புல் 5 . அக்சய் குமார் நடித்திருந்த இந்த நகைச்சுவை திரைப்படம் 4 நாட்களில் ரூ.100 கோடியைத் தாண்டியது.

''ரெய்டு 2''

கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான ''ரெய்டு'' படத்தின் தொடர்ச்சியாக, அஜய் தேவ்கன் நடித்த இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்து, பாக்ஸ் அபீஸில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படம் ரூ. 100 கோடி வசூலை எட்ட எட்டு நாட்கள் ஆகின.

''ஸ்கை போர்ஸ்''

இந்தியாவின் முதல் மற்றும் வான்வழித் தாக்குதலை மையமாகக் கொண்டு உருவான படம் 'ஸ்கை போர்ஸ்'. இந்த படத்தில் நிம்ரத் கவுர் , சாரா அலி கான் மற்றும் வீர் பஹாரியா ஆகியோர் அக்சய் குமாருடன் இணைந்து நடித்தனர். இது அதன் இரண்டாவது வாரத்தியில் ரூ. 100 கோடியைத் தாண்டியது.

''சிக்கந்தர்''

சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய அதிரடி படம் ''சிக்கந்தர்''. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் 9-ம் நாளில் ரூ. 100 கோடி வசூலை எட்டியது.

1 More update

Next Story