நடிப்பில் முழு கவனம்

லட்சுமிமேனன் தற்போது முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
நடிப்பில் முழு கவனம்
Published on

'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் லட்சுமிமேனன். படிப்பு, நடிப்பு என பிஸியாக இருந்ததால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறிவந்த அவர், இப்போது முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம். அதற்கு கை மேல் பலனாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. படத்தின் பெயர் 'மலை'. நடிப்புக்கு தீனி போடக்கூடிய இந்தப் படம் 'அறம்' நயன்தாரா அளவுக்கு தனக்கு பெயர் வாங்கித்தரும் என்று தன் நலம்விரும்பிகளிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி அடைந்து வருகிறாராம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com