கேப்ரியல்லா நடித்த 'வருணன்' படத்தின் அப்டேட்


தினத்தந்தி 19 Jan 2025 5:02 PM IST (Updated: 22 Feb 2025 5:01 PM IST)
t-max-icont-min-icon

கேப்ரியல்லா நடித்த 'வருணன்' படத்தின் 'ஆசம் பீலு' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் இசையை போபோ சாஷி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீராம சந்தோஷ் மேற்கொண்டுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே படத்தின் பாடலான காதலே மற்றும் கோளாரு ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான ஆசம் பீலு பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ், சுருதிஹாசன் நடித்த 3 படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து நடிகையாக அறிமுகமானார் கேப்ரியல்லா. குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கேப்ரியல்லா, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து ரன்னர்அப் இடத்தை பிடித்தார்.

1 More update

Next Story