கஜா புயல் நிவாரணம் - நடிகர் விக்ரம் ரூ.25 லட்சம் உதவி

நடிகர் விக்ரம், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கினார்.
கஜா புயல் நிவாரணம் - நடிகர் விக்ரம் ரூ.25 லட்சம் உதவி
Published on

கஜா புயல் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின்சாரம் இன்றியும் தவிக்கிறார்கள்.

பாதிக்கப்படோருக்கு உதவ தமிழகம் முழுவதிலும் இருந்து நிவாரண உதவிகள் குவிகின்றன. நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவி பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். நடிகர் விஜய்யும் ரசிகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வழங்கி உள்ளனர்.

நடிகர்கள் விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் வழங்கி உள்ளனர். இப்போது நடிகர் விக்ரமும் ரூ.25 லட்சத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில், டொரான்டோவில் 24-ந்தேதி இசை நிகழ்ச்சி நடத்துகிறோம். அதில் திரட்டப்படும் நிதி தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

லட்சிய தி.மு.க தலைவரும், டைரக்டருமான டி.ராஜேந்தர், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்களை சென்னையில் இருந்து லாரிகள் மூலம் டெல்டா மாவட்டங் களுக்கு அனுப்பி வைத்தார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com