அமலாக்கத்துறையிடம் கூறியது என்ன? - விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி

ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஆஜரானார்.
''Gambling apps are different from gaming apps'' - Actor Vijay Deverakonda
Published on

ஐதராபாத்,

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நிறைவு பெற்றிருக்கிறது.

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, பிரகஷ் ராஜ், ரானா டகுபதி உள்ளிட்ட நடிகர்கள், சமூகவலைதள பிரபலங்கள் உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பலருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த வகையில், விசாரணைக்கு 6ம் தேதி (இன்று) ஆஜராகும்படி நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஆஜரானார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நிறைவு பெற்றிருக்கிறது.விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் விஜய் தேவரகொண்டா கூறுகையில், "சூதாட்ட செயலிக்கும்  கேமிங் செயலிக்கும் வித்தியாசம் உள்ளது. நான் கேமிங் செயலி விளம்பரத்தில் மட்டுமே நடித்தேன். நான் பெற்ற பணம், ஒப்பந்தம், நடைமுறைகள் பற்றி விளக்கம் அளித்துள்ளேன் என்றார்.

முன்னதாக இதே வழக்கில் கடந்த 30ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com