24 மணி நேரத்தில் 70 மில்லியன் பார்வைகளை கடந்த 'கேம் சேஞ்சர்' டீசர்

ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
24 மணி நேரத்தில் 70 மில்லியன் பார்வைகளை கடந்த 'கேம் சேஞ்சர்' டீசர்
Published on

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

முன்னதாக, இந்த படத்தை டிசம்பர் 20-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. பின்னர் 'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்தது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியானது.

இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்திலேயே 70 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அந்த வகையில் அதிக பார்வைகளை பெற்ற படங்களின் வரிசையில் 'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் 2-வது இடத்தில் உள்ளது. 83 மில்லியன் பார்வைகளை கடந்து 'சாலர்' படத்தின் டீசர் முதல் இடத்தை பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com