'கேம் சேஞ்சர்' படம்தான் நான் வைத்த தவறான படி - தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தம்


கேம் சேஞ்சர் படம்தான் நான் வைத்த தவறான படி -  தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தம்
x

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'கேம் சேஞ்சர்' படம் படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

சென்னை,

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ''கேம் சேஞ்சர்''. ஆனால் எதிர்பார்ப்புகளை அப்படம் பூர்த்தி செய்யவில்லை. ''ஆர்.ஆர்.ஆர்'' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான இப்படம் படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் 'இந்தியன்-2' மற்றும் 'கேம் சேஞ்சர்' என தொடர் தோல்வி படங்களால் முன்னணி இயக்குனரான ஷங்கர் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். மேலும் இயக்குனர் ஷங்கர் படத்தை 7 மணி நேர காட்சியாக எடுத்து 3 மணிநேரமாக குறைத்தார் என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையில், 'கேம் சேஞ்சர்' படம் தான் நான் வைத்த தவறான படி, என அதன் தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "ஷங்கர் போன்ற ஒரு பெரிய இயக்குனருடன் நான் இதுவரை பணியாற்றியது இல்லை. அந்தவகையில் ஒரு ரிஸ்க் எடுத்தேன். ஆனால் 'கேம் சேஞ்சர்' தான் நான் வைத்த தவறான படி."

படம் உறுதியானபோதே நான் ஒப்பந்தத்தில் சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கலாம். நான் அதை செய்யாமல் விட்டது தான் தவறு. ஒரு கட்டத்துக்கு மேல் பல விஷயங்கள் என் கையை விட்டு போய்விட்டது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி அடிபட்டு தான் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. இனி வருங்காலத்தில் உஷாராக இருப்பேன்'', என்றார்.

1 More update

Next Story