வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்

வீடு தரகர் புகார் குறித்து நடிகை கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார்.
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
Published on

பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மும்பை பாந்த்ரா பாலிஹில் பகுதியில் 3075 சதுர அடி பங்களா வீட்டை ரூ.20.07 கோடி கொடுத்து கங்கனா ரணாவத் விலைக்கு வாங்கி உள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்கு பிரகாஷ் என்ற தரகர் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உதவி செய்துள்ளார்.

ஆனால் பேசியபடி கங்கனா ரணாவத் தரகர் கமிஷன் கொடுக்கவில்லை என்று பாந்த்ரா போலீசில் தரகர் பிரகாஷ் புகார் செய்தார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கங்கனா ரணாவத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

பாலி ஹில் பகுதியில் கடந்த வருடம் இந்த பங்களா விட்டை வாங்கினேன். அப்போது புரோக்கர் கமிஷன் ஒரு சதவீதம் என்று பேசி அதற்கான தொகை ரூ.22 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்போது இரண்டு சதவீதம் புரோக்கர் கமிஷனாக மேலும் ரூ.22 லட்சம் கேட்கின்றனர். இதற்காக என்னை தொந்தரவு செய்கிறார்கள். இதுகுறித்து போலீசாரிடம் தெளிவுபடுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com