"கேங்கர்ஸ்" 5 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?


கேங்கர்ஸ் 5 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
x
தினத்தந்தி 29 April 2025 5:23 PM IST (Updated: 14 May 2025 6:02 PM IST)
t-max-icont-min-icon

சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் 'கேங்கர்ஸ்' படம் வெளியாகி உள்ளது.

சென்னை,

சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. சுமார் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தநிலையில், கடந்த 24-ந் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இந்த படத்தினை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சத்யா.சி இதற்கு இசையமைத்திருந்தார்.

கேத்ரின் தெரசா, வாணி போஜன், ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படம் தமிழ்நாட்டில் 300-க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்தநிலையில் 'கேங்கர்ஸ்' திரைப்படம் ஐந்து நாட்களில் ரூ 9 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை என்பதால் இனிவரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story