"கேங்கர்ஸ்" படக்குழு வெளியிட்ட ஸ்பாட்லைட் வீடியோ

சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
Published on

சென்னை,

சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. சுமார் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். மேலும் ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் வடிவேலு பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். குறிப்பாக பெண் வேடமிட்டும் நடித்துள்ளார். சமீபத்தில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி 2 நாள்களில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டிருந்தது. கேத்ரின் தெரசாவின் கவர்ச்சி நடனமும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்களை ஸ்பாட்லைட் எனும் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com