கேங்கர்ஸ் படம் : லேடி கெட்டப்பில் நடிக்கும் வடிவேலு!

சுந்தர்.சி இயக்கும் 'கேங்கர்ஸ்' படத்தில் வடிவேலு லேடி கெட்டப்பில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேங்கர்ஸ் படம் : லேடி கெட்டப்பில் நடிக்கும் வடிவேலு!
Published on

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. சுந்தர்.சி வடிவேலு இதுவரை மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வின்னர் படத்தின் கைப்புள்ள, தலைநகரம் படத்தின் நாய் சேகர், நகரம் மறுப்பக்கம் படத்தின் ஸ்டைல் பாண்டி கதாபாத்திரங்கள் என்றென்றும் ரசிக்க கூடியவை.

இதற்கிடையில் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. அதாவது, வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'கேங்கர்ஸ்' படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வடிவேலு மற்றும் சுந்தர். சி-யுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் வடிவேலு 5 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், அதிலும் முக்கியமாக லேடி கெட்டப்பிலும் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வடிவேலு ஏற்கனவே "பாட்டாளி, நகரம், தலைநகரம்" ஆகிய படங்களில் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com