11 ஆண்டுகளாக கலக்கும் 'கங்னம் ஸ்டைல்'... யூடியூபில் புதிய சாதனை...!

கே-பாப் எனப்படும் தென் கொரிய பாடல்களுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
11 ஆண்டுகளாக கலக்கும் 'கங்னம் ஸ்டைல்'... யூடியூபில் புதிய சாதனை...!
Published on

சென்னை,

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் தளத்தில் பல்வேறு மொழி பாடல்களை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அப்படி வெளியாகும் பாடல்களில் அவ்வப்போது ஒருசில பாடல்கள் உலகம் முழுவதும் வைரலாகி பல மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைகளை படைத்து வருகின்றன.

அந்தவகையில் கே-பாப் எனப்படும் தென் கொரிய பாடல்களுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக பி.டி.எஸ் எனப்படும் பாடகர் குழு வெளியிடும் பாடல்கள் பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக பார்வைகளை பெறுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.

இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் வைரலான 'கங்னம் ஸ்டைல்' என்னும் கொரிய பாடல் யூடியூபில் 500 கோடி பார்வைகளை கடந்து சாதனையை படைத்துள்ளது. .

கடந்த 2012 ஆண்டு தென்கொரியாவை சேர்ந்த பிஎஸ்ஒய் (PSY) என்பவர் குரலில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல் 'கங்னம் ஸ்டைல்'. இந்த பாடல் வெளியான நாள் முதலே பல்வேறு ரசிகர்களால் விரும்பப்பட்டு உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனது.

இந்த பாடல் பலரின் செல்போன் ரிங்டோனாகவும் அந்த காலகட்டத்தில் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் மாணவர்கள் நடனமாட இந்த பாடலை அதிகம் பயன்படுத்தினர். தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் கவனத்தையும் இந்த பாடல் கவர்ந்தது.

இந்த பாடலை தற்போது வரை பல ரசிகர்கள் யூடியூப் தளத்தில் பார்த்து ரசித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த பாடல் தற்போது யூடியூப் தளத்தில் 500 கோடி பார்வைகளை கடந்த முதல் பாடல் என்ற சாதனையை பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com