'கேங்ஸ்டர்' கதை

'கேங்ஸ்டர்' கதை
Published on

'டைனோசரஸ்' என்ற பெயரில், புதிய படம் தயாராகி உள்ளது. இதில் உதய் கார்த்திக், ரிஷி ரிதிவிக், சாய்பிரியா, யாமினி சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.ஆர்.மாதவன் டைரக்டு செய்துள்ளார். படம் குறித்து எம்.ஆர். மாதவன் கூறும்போது ''டைனோசரஸ் கதையை பல கதாநாயகர்களிடம் சொல்லியும் நடக்கவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நேரடியாக கதையை சொல்லி 15 பேரிடம் அட்வான்ஸ் தொகையும் வாங்கினேன். அதுவும் பல லட்சங்களை தாண்டியது. ஆனாலும் பட வேலைகள் தொடங்கவில்லை.

இறுதியாக துணிவு பட டைரக்டர் வினோத் எனக்காக பல தயாரிப்பாளர்களிடம் பேசி இந்த படத்தின் தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசை அறிமுகம் செய்து வைத்தார். நான் கலை படம் எடுக்கவில்லை. இது ஒரு கேங்ஸ்டர் படம், தலைப்புக்கான அர்த்தம் படத்தை பார்த்தால் புரியும்'' என்றார். இசை: போபோ சசி.

X

Daily Thanthi
www.dailythanthi.com