'கருடன்' படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்' லிரிக்கல் வீடியோ

நடிகர் சூரி நடித்துள்ள 'கருடன்' படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
Published on

சென்னை,

நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் கருடன். இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத, துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் மே 31-ம் தேதி வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

தற்பொழுது படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சூரி கையில் அரிவாளுடன் மிகவும் கோவத்துடனும், வெறியுடனும் காணப்படுகிறார். சூரி எப்பேற்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com