கவுரி கிஷனின் “அதர்ஸ்” டிரெய்லர் வெளியீடு

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.
Published on

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் அதர்ஸ். மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கேரளத்து தேசத்தில் பிறந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் கவுரி கிஷனும் ஒருவர். 96' படத்தில் அவர் நடித்த ஜானு கதாபாத்திரம் அவருக்கு பெரியளவில் பெயரை ஏற்படுத்தி தந்தது. மாஸ்டர்', கர்ணன்', அடியே', ஹாட் ஸ்பாட்', போட்' என பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் 'முண்டாசுபட்டி' ராமதாஸ், 'நண்டு' ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 7ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதற்கிடையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து ஒரு பார்வை பார்த்தவனே என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஜிப்ரான், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் நமீதா பாபு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை மோகன்ராஜன் எழுதியுள்ளார்.

இந்நிலையில், அதர்ஸ்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com