மீண்டும் நடிக்க வந்த கவுதமி

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கூட நல்ல கதாபாத்திரங்கள் என்னை தேடி வருவது எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவமாக நினைப்பதாக கவுதமி பேட்டியில் கூறியுள்ளார்.
மீண்டும் நடிக்க வந்த கவுதமி
Published on

தமிழ், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் கவுதமி. பின்னர் சினிமாவை விட்டு பல வருடங்களாக ஒதுங்கி இருந்து மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

இதுகுறித்து கவுதமி அளித்துள்ள பேட்டியில், "எனது முதல் காதல் சினிமா மீதுதான். டீன் ஏஜிலேயே சினிமா துறையில் அடி எடுத்து வைத்தேன். அனைத்து மொழி படங்களிலும் என் சொந்தமொழி போலவே பாவித்து நடித்தேன்.

நான் இடையில் 10 ஆண்டுகள் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியதால் கேமராவை விட்டு கொஞ்சம் விலகி விட்டேன். இப்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கி இருக்கிறேன். என் மகள் பிலிம் மேக்கிங் படித்துக் கொண்டிருக்கிறார். இன்றைய தலைமுறை இயக்குனர்கள் தயாரிக்கும் படங்களை பார்த்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. அற்புதமான படங்களை வடிவமைத்து வருகிறார்கள்.

எனது செகண்ட் இன்னிங்ஸிலும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கூட நல்ல கதாபாத்திரங்கள் என்னை தேடி வருவது எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். தாய், மனைவி, சினேகிதி இப்படி அனைத்து கதாபாத்திரங்களிலும் நான் நடிப்பேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com