'பார்க்கிங்' படத்துக்கு கவுதம் கார்த்திக் பாராட்டு..!

'பார்க்கிங்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'பார்க்கிங்' படத்துக்கு கவுதம் கார்த்திக் பாராட்டு..!
Published on

சென்னை,

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சனையை விவரிக்கும் விதமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. 'பார்க்கிங்' திரைப்படம் நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், 'பார்க்கிங்' படம் பார்த்துள்ள நடிகர் கவுதம் கார்த்திக் படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் அவர், "நேற்று பார்க்கிங் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் படத்தை முழுமையாக ரசித்தேன்! இது போன்ற ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமாருக்கு வாழ்த்துகள். ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகள்! படம் நாளை வெளியாகி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com