'சூர்யா என்னை நம்பவில்லை' - கவுதம் வாசுதேவ் மேனன்


gautham vasudev menon about suriya
x

கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது நடிகர் மம்முட்டியை வைத்து 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

சென்னை,

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது நடிகர் மம்முட்டியை வைத்து 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது இவரது முதல் மலையாள படமாகும். இப்படம் வரும் 23-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இப்படத்திற்கான புரமோஷனின்போது சூர்யா குறித்து கவுதம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

"துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்காக முதலில் சூர்யாவைதான் நான் அணுகினேன். ஆனால், அவர் என்னை நம்பவில்லை. காக்க காக்க, வாரணம் ஆயிரம் என அவருக்கு வெற்றிப்படங்களைக் கொடுத்தும் சூர்யா துருவ நட்சத்திரத்தில் இணையாதது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது. அவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை" என்றார்.

1 More update

Next Story