பா.ஜனதா கட்சியினர் மீது காயத்ரி ரகுராம் சாடல்

நடிகை காயத்ரி ரகுராம் அடையாறு பகுதியில் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது குடிபோதையில் கார் ஓட்டி வந்து சிக்கியதாகவும் இதற்காக அவர் அபராதம் செலுத்தியதாகவும் செய்திகள் வெளியானது.
பா.ஜனதா கட்சியினர் மீது காயத்ரி ரகுராம் சாடல்
Published on

போதையில் இருந்ததால் போலீஸ்காரர் காரை ஓட்டி சென்று வீட்டில் காயத்ரி ரகுராமை இறக்கி விட்டார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் போதையில் நான் கார் ஓட்டவில்லை என்று காயத்ரி ரகுராம் மறுத்தார். இந்த நிலையில் பா.ஜனதா கட்சியினரை அவர் கடுமையாக சாடி உள்ளார். பா.ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாரில் செயற்குழு உறுப்பினராக காயத்ரி ரகுராம் இருக்கிறார். அந்த கட்சிக்கு எதிராக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழக பா.ஜனதா கட்சியில் உள்கட்சி பூசல் நிலவுகிறது. எனது புகழை பார்த்து அவர்களுக்கு அச்சமும் கலக்கமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் நான் பந்தாடப்படுகிறேன். என் மீது களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. நான் சமீப காலமாக பா.ஜனதா கட்சி பணிகளில் வேகமாக செயல்படவில்லை.

ஆனாலும் சிலர் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். அந்த இளைய தலைவர்களுக்கு வாழ்த்துக்கள். எல்லாம் விதிப்படி நடக்கின்றன. அவர்கள் என்றாவது வெற்றி அடையட்டும். இந்த அரசியல் செயல்பாடுகள் குறித்து பதிவிடகூட எனக்கு விருப்பம் இல்லை.

இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com