'ஜென்டில்வுமன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜென்டில்வுமன்’ திரைப்படம் மார்ச் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்' திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.. ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ராஸ், காலா, நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிகிருஷ்ணன் இதில் நடித்துள்ளார்.
ஜென்டில்வுமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் "ஆண்களுக்கு மட்டும்தான் ஜென்டில் என்று சொல்ல வேண்டுமா? வலிமை, பொலிவினை புது அர்த்தம் தெரிவிக்க ஜெண்டில்வுமன் வந்திருக்கிறாள்" என படக்குழு குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் 'ஜென்டில்வுமன்' திரைப்படம் மார்ச் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






