

சென்னை,
நடிகை யாமி கவுதம், ‘துரந்தர் 2’ படத்தைப் பற்றி சுவாரசியமான தகவலை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ‘துரந்தர் ’ பட இயக்குனர் ஆதித்யா தாரின் மனைவியான யாமி, இந்த படத்தில் பல முக்கிய கேமியோ தோற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.
இதுகுறித்து பேசிய யாமி, படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் சில எதிர்பாராத நடிகர்கள் தோன்றுவார்கள் என்றும், அவை படத்தின் திரில்லை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அவை கதையின் முக்கிய பகுதியாக இருக்கும் என்றும் கூறினார்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘துரந்தர் 2’ உள்ளது. இப்படம் மார்ச் 19-ம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.