அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் நடிகை ஸ்ரீ ரெட்டி ஆவேசம்

அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள் என நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசமாக கூறி உள்ளார். #SriReddy #Varahi
அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் நடிகை ஸ்ரீ ரெட்டி ஆவேசம்
Published on

ஐதராபாத்

பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றி தெலுங்கு பட உலகினர் படுக்கையில் தன்னை பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் வெளியிட்டார்.

இப்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிவருகிறார். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை கண்டித்தது. தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் போலீஸ் விசாரணை நடத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

டைரக்டரும், நடிகருமான வாராகி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தார். நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபடுவதாகவும் விபச்சாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை போலீசார் கைது செய்து விட்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை ஸ்ரீரெட்டி மறுத்ததுடன் வதந்தி பரப்பியவர்களுக்கு கண்டனமும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கூறி இருப்பதாவது:-

நான் பாலியல் தொழிலாளி இல்லை. என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு உணவு கூட தராமல் வெளியே அனுப்பினார்கள். யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள்.

என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள். பாதிக்கப்பட்ட பெண் நான். எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக என்னை வைத்து மலிவான விளம்பரம் தேட நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com