98வது ஆஸ்கர் விருது போட்டியில் நுழைந்த “கெவி”

மலைவாழ் மக்கள் வாழ்வியலை மையமாக கொண்டு உருவான ‘கெவி’ படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் நுழைந்துள்ளது.
98வது ஆஸ்கர் விருது போட்டியில் நுழைந்த “கெவி”
Published on

தமிழ் தயாளன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி வெளியான படம் கெவி. இதில் அறிமுக நடிகர் ஆதவன் நாயகனாக நடித்திருந்தார். மேலும், ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராசி தங்கதுரை வசனம் எழுதிய இந்தப் படத்துக்கு ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்திருந்தார். பாலசுப்பிரமணியன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கொடைக்கானல் அருகிலுள்ள மலைவாழ் மக்கள் வாழ்வியலை மையமாக கொண்டு உருவான இந்த படம் திரையரங்குகளில் வரவேற்பை பெற்றது.கெவி படம் 98-வது ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தமிழ் சர்வைவல் திரைப்படமான கெவி 98வது ஆஸ்கர் விருதுகள் போட்டியில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. அகாடமி உறுப்பினர்கள் ஜனவரி 12 முதல் 16 வரை இறுதி நாமினேஷன்களுக்கான வாக்குப்பதிவை மேற்கொள்ள உள்ளனர். அதிகாரப்பூர்வ நாமினேஷன் பட்டியல் ஜனவரி 22 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா, 2026 மார்ச் 15 அன்று அமெரிக்காவின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com