

இரத்தப் புற்றுநோய் காரணமாக மும்பையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பிரதீப் ராவத் (வயது 74) இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் சிலம்பரசனின் ‘தொட்டி ஜெயா’ படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் பிரதீப் ராவத். அதன் பிறகு சூர்யாவின் ‘கஜினி’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். இந்த படம் மூலமாகத் தான் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். வாத்தியார், அசல், ராஜபாட்டை, ஜில்லா, வீரம், ஆம்பள போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர் சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டு வந்திருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் நோய் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 4) மாலை நடிகர் பிரதீப் ராவத் (வயது 74) உயிரிழந்ததார். அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ராவத்தின் மறைவு குறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்