'கில்லி ரீ-ரிலீஸ்' - திரையரங்கிற்கு சென்று பார்த்த இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்

கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீசாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
'கில்லி ரீ-ரிலீஸ்' - திரையரங்கிற்கு சென்று பார்த்த இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்
Published on

சென்னை,

தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி.

இப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

எப்போது பார்த்தாலும் சலிக்காத கதைக்களம், விஜய், பிரகாஷ் ராஜின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அதிரடியான பாடல்கள் என படத்தின் சிறப்பம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜுனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.

தற்போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீசாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கில்லி திரைப்படத்தை இயக்கிய தரணி மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகர் கில்லி திரைப்படம் ஓடும் திரையரங்கிற்கு சென்று நேரில் கண்டு மகிழ்ந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com