இந்தியாவுக்கு வருகை தரும் 'கிளாடியேட்டர் II' படக்குழு?


Gladiator II crew to visit India?
x

'கிளாடியேட்டர் II' படக்குழு இந்தியாவில் புரமோசன் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.

மேலும், இது ஐந்து ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்காட் தற்போது உருவாக்கியுள்ளார். இப்படத்தில், பால் மெஸ்கல், டென்சல் வாஷிங்டன், பெட்ரோ பாஸ்கல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படத்தின் 2 டிரெய்லர்கள் வெளியாகி வைரலாகின. வருகிற 15-ந் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளநிலையில், படக்குழு இந்தியாவில் புரமோசன் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்தின் இயக்குனர் ரிட்லி ஸ்காட் மற்றும் நடிகர் பால் மெஸ்கல் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிளாடியேட்டர் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

1 More update

Next Story