'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!

சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!
Published on

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 23-ந்தேதி 12.01 மணிக்கு 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com