இணையத்தில் வைரலாகும் 'அயலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
இணையத்தில் வைரலாகும் 'அயலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ..!
Published on

சென்னை,

இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'அயலான்'. இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான் படத்தில் 4500-க்கும் அதிகமான விஎப்எக்ஸ் (VFX) காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படம் முழுவதும் ஏலியன் கதாப்பாத்திரம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அயலான்' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'அயலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com