'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு

சூர்யா நடிக்கும் 'கங்குவா' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில், 'கங்குவா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com