ராம்கோபால் வர்மாவின் ஆபாச படம் வெளியாகும் இணையதளம்

மல்கோவா- ராம் கோபால் வர்மாவின் ஆபாச படம் நாளை இணையத்தளத்தின் மூலம் வெளியாகிறது.#GodSexTruth | #RamGopalVarma
ராம்கோபால் வர்மாவின் ஆபாச படம் வெளியாகும் இணையதளம்
Published on

ராம்கோபால் வர்மா தற்போது, காட் செக்ஸ் அன்ட் ட்ரூத் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருக்கிறார். இந்தப் படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகும் இணையதளம் குறித்த தகவலை ராம்கோபால் வர்மா இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அமெரிக்க இணையதளமான http://www.godsextruth.online என்ற இணையதளத்தில் வரும் 26ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்த படம் வெளியாகிறது.

இந்த இணையதளத்தை படத்தை பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும், ஒருமுறை கட்டணம் செலுத்தினால் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். மீண்டும் பார்க்க வேண்டும் என்றால் மறுபடியும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் ரூ 150 ஆக கட்டணம் நிர்ணயிக்கபட்டு உள்ளது. இலங்கையில் ரூ.200 கட்டணம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com