'மீசைய முறுக்கு 2' படத்திலிருந்து 'கோயிந்தம்மா' பாடல் அப்டேட்

மீசையை முறுக்கு 2 திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'மீசைய முறுக்கு 2' படத்திலிருந்து 'கோயிந்தம்மா' பாடல் அப்டேட்
Published on

சென்னை,

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மீசையை முறுக்கு படத்தின் மூலம் தன்னை நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய மீசையை முறுக்கு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீசையை முறுக்கு படத்தின் இரண்டாம் பாகத்தை ஆதி இயக்கி நடித்துள்ளார். சுந்தர் சி - குஷ்பு தயாரித்துள்ள இந்த படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் 'மீசைய முறுக்கு 2' படத்திலிருந்து ஆரா 10/10, பப்பாளி பழமே ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து மூன்றாவது பாடலாக 'கோயிந்தம்மா' என்ற பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 21ந் தேதி (நாளை) இந்த பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பாடல்களை போல் இந்த பாடல் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com