கோல்டன் குளோப் விருதுகள்: சிறந்த படத்திற்கான விருதை தட்டிச்சென்ற ஓப்பன்ஹெய்மர்...!

கோல்டன் குளோப் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
கோல்டன் குளோப் விருதுகள்: சிறந்த படத்திற்கான விருதை தட்டிச்சென்ற ஓப்பன்ஹெய்மர்...!
Published on

வாஷிங்டன்,

உலக அளவில் சினிமா துறையில் சாதனை புரிந்தவர்களை அங்கிகரிக்கும் உச்சபட்ச விருது ஆஸ்கர். அதற்கு அடுத்தபடியாக கோல்டன் குளோப் விருதுகள் உலக அளவில் புகழ்பெற்றதாகும்.

இந்நிலையில், 81வது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் பெவெல்ரி கில்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில், சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதை ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வென்றது.

2023ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வென்ற திரைப்படம், நடிகர், நடிகை குறித்த விவரம்:-

சிறந்த திரைப்படம் (டிராமா) - ஓப்பன்ஹெய்மர்

சிறந்த நடிகர் (டிராமா) - கிலியன் மெர்பி (ஓப்பன்ஹெய்மர்)

சிறந்த நடிகை (மியூசிக்/காமெடி) - எமா ஸ்டோன் (புவர் திங்கிங்)

சிறந்த நடிகை (டிராமா) - லில்லி கிலாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்)

சிறந்த இயக்குனர் (டிராமா) - கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)

சிறந்த திரைப்படம் (மியூசிக்/காமெடி) - புவர் திங்கிங்

சிறந்த நடிகர் (மியூசிக்/காமெடி) - பால் ஹியமதி (தி ஹொல்ட்ஓவர்)

சிறந்த துணை நடிகை (மோஷன் பிக்சர்) - டா வினி ஜோய் ரண்டொல்ப் (தி ஹொல்ட்ஓவர்)

சிறந்த துணை நடிகர் (மோஷன் பிக்சர்) - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)

சிறந்த பாடல் (மோஷன் பிக்சர்) - வாட் ஐ வாஸ் மெட் பார் (பார்பி)

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com