கார் ரேஸில் வெற்றி - அஜித்துக்கு 'குட் பேட் அக்லி' இயக்குனர் வாழ்த்து


Good Bad Ugly director congratulates Ajith on winning the car race
x

இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விடாமுயற்சி' படத்தைதொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் ரேஸரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்நிலையில், குட் பேட் அக்லி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்திற்கு வாழ்த்து கூறியுளளார். அவர் வெளியிட்ட பதிவில், 'கிங்கிற்கு இன்னொரு வெற்றி. அஜித் சார் மற்றும் அணியினருக்கு வாழ்த்துகள். மீண்டும் மேடையில் இந்தியாவை பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். லவ் யூ அஜித் சார்' என தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story