"குட் பேட் அக்லி" முதல் நாள் அதிகாரபூர்வ வசூல் வெளியீடு


குட் பேட் அக்லி முதல் நாள் அதிகாரபூர்வ வசூல் வெளியீடு
x
தினத்தந்தி 11 April 2025 7:36 PM IST (Updated: 12 April 2025 9:19 AM IST)
t-max-icont-min-icon

அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரூ.30.9 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இப்படம் முதல் நாளில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

இந்நிலையில், அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம், தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 30.9 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உலக அளவில் இப்படம் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story