'லியோ' சாதனையை முறியடித்த 'குட் பேட் அக்லி' டிரெய்லர்


Good Bad Ugly trailer breaks Leo record
x

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’குட் பேட் அக்லி’ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குட் பேட் அக்லி. இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. கடந்த 4-ம் தேதி வெளியான இந்த டிரெய்லர் அதிக பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

அதன்படி, வெளியாகி 24 மணி நேரத்தில் 3.2 கோடி பார்வைகளைக் கடந்து ஒரே நாளில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் டிரெய்லர் என்ற பெருமையைப் இது பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான லியோ டிரெய்லர் 3.10 கோடி பார்வைகளை கடந்து முதல் இடத்தில் இருந்தது. இதன் மூலம் லியோ சாதனையை முறியடித்து முதல் இடத்தை குட் பேட் அக்லி டிரெய்லர் பிடித்திருக்கிறது.

குட் பேட் அக்லி – 3.20 கோடி பார்வைகள்

லியோ – 3.10 கோடி பார்வைகள்

துணிவு – 3.09 கோடி பார்வைகள்

பீஸ்ட் – 2.70 கோடி பார்வைகள்

தி கோட் – 2.42 கோடி பார்வைகள்

1 More update

Next Story