'நல்ல படங்களுக்கு வரவேற்பு கிடைக்கும்' - நடிகர் சரத்குமார்

'நல்ல படங்களுக்கு வரவேற்பு கிடைக்கும்' - நடிகர் சரத்குமார்
Published on: 

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ள படம் போர் தொழில். இந்த படத்தை விக்னேஷ் ராஜா டைரக்டு செய்து இருந்தார். படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து சென்னையில் நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் சரத்குமார் பங்கேற்று பேசும்போது, "போர் தொழில் படத்தை இயக்குனர் சிறப்பாக எடுத்து இருந்தார். ஹாலிவுட் படம் போலப் பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. தியேட்டர்களுக்கு யாரும் வருவது இல்லை என்று நினைக்க வேண்டாம். நல்ல படங்களை எடுத்தால் வரவேற்பு கிடைக்கும். தியேட்டருக்கு வந்து மக்கள் படம் பார்ப்பார்கள். எனவே நல்ல கதைகளை படமாக எடுக்க வேண்டும்'' என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, "கடந்த வருடம் நிறையப் படங்கள் செய்தேன். நல்ல படமென்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகவில்லை. எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் செய்கிறோமா..? என கேள்வி வந்தது. அதற்கெல்லாம் பதிலாக இந்தப்படம் வந்துள்ளது. "உன் வேலையைச் சரியா செஞ்சா மரியாதை தானா வரும்" என்றார்.

X