ராஷ்மிகா பகிர்ந்த நல்ல குணநலன்கள்

ராஷ்மிகா பகிர்ந்த நல்ல குணநலன்கள்
Published on

தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தனது நல்ல குணநலன்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் வாழ்க்கையில் சிறிய நல்ல விஷயங்களாக இருந்தாலும் அவற்றையும் கடைபிடிக்கிறேன். அதிகாலையிலேயே எழுந்து விடுவேன். சிறிது நேரம் வளர்ப்பு நாய்களுடன் விளையாடுவேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்களை சந்திப்பேன். இதுபோன்ற சிறிய விஷயங்கள் என்னை சந்தோஷப்படுத்தும்.

பேச்சு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு மனிதனை வேதனைப்படுத்த வேண்டும் என்றாலும் உறவை பலப்படுத்த வேண்டும் என்றாலும் அது நாம் பேசும் விதத்தை பொறுத்தே இருக்கிறது. அதனால் யாராவது என்னிடம் ஏதாவது சொன்னால் அதை அக்கறையோடு கேட்பேன். ஒவ்வொரு விஷயத்தையும் டைரியில் குறித்துக்கொள்வேன். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் காலை தொட்டு தினமும் வணங்குவேன்.

அதுபோல் எங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் காலை கூட தொட்டு வணங்குவேன். காரணம் நான் மனிதர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக சமமாக பார்க்கிறேன்'' என்றார். ராஷ்மிகா தற்போது புஷ்பா-2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com