

சென்னை,
ஆரம்பத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு நடிகர் கோபிசந்த், பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினா. மிகப்பெரிய வெற்றிப்படம் என்று எதுவும் அமையாவிட்டாலும், அவரது படங்கள் அனைத்தும் சுமாரான வரவேற்பை பெறும்.
இவர் கடைசியாக ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் விஷ்வம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனக்களை பெற்றது. இந்நிலையில், கோபிசந்தின் 33-வது பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, 'காஸி' படத்தை இயக்கி பிரபலமான சங்கல்ப் ரெட்டி, கோபி சந்தின் அடுத்த படத்தை இயக்குகிறார்.
நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.