கோபிசந்தின் 33வது படம் - வைரலாகும் பர்ஸ்ட் லுக்


Gopichand’s first look unveiled from his 33th film
x

குமார் வெள்ளங்கி இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரிக்கிறது.

சென்னை,

கோபிசந்தின் 33வது படத்திலிருந்து அவரது பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

ஆரம்பத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு நடிகர் கோபிசந்த், பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினாா். மிகப்பெரிய வெற்றிப்படம் என்று எதுவும் அமையாவிட்டாலும், அவரது படங்கள் அனைத்தும் சுமாரான வரவேற்பை பெறும்.

இவர் கடைசியாக ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் விஷ்வம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர், தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார்.

குமார் வெள்ளங்கி இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரிக்கிறது. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகாதநிலையில், கோபிசந்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

1 More update

Next Story