சிம்பு படத்துக்கு அரசு விடுமுறை விட வேண்டும் - கூல் சுரேஷ் வேண்டுகோள்

சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வெளியாகும் அன்று அரசு விடுமுறை விட வேண்டும் என்று கூல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Published on

சென்னை,

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகை சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ஏஞ்சலினா ஆபிரகாம், நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த நிலையில், 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வெளியாகும் தினமான செப்டம்பர் 15-ம் தேதி அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்று நடிகரும் சிம்புவின் ரசிகருமான கூல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கூல் சுரேஷ் கூறும்போது, 'தமிழக முதல் அமைச்சருக்கு ஒரு சிறிய வேண்டுகோள். வருகிற செப்டம்பர் 15-ம் தேதி அன்று ரெட் ஜெயன்ட் வெளியிடும் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. எனவே அன்று மட்டும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அனைத்து சிம்பு ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com