ஹாலிவுட் தரத்தில் உருவாகும் 'விஸ்வம்பரா' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள்


ஹாலிவுட் தரத்தில் உருவாகும் விஸ்வம்பரா படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள்
x

'விஸ்வம்பரா' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் சுமார் ரூ.75 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் இதுவரை 156 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும், சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தில் அதிகமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் சுமார் ரூ.75 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஸ்வம்பரா படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சிகளும் ஹாலிவுட் தரத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது, விஸ்வம்பரா இந்த உலகத்தில் எப்படி தோன்றினார். மனிதருக்கும் அவருக்கும் இருக்கும் உறவு என்ன என்பதுதான் இப்படத்தின் மையக்கதையாகும்.

1 More update

Next Story