இனிவரும் காலங்களில் சிறந்த நன்மைகள் விளையும்- நானி நம்பிக்கை

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான நானி , தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் சிறந்த நன்மைகள் விளையும்- நானி நம்பிக்கை
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் கள நிலவரங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து, வாக்காளர்களுக்குப் பணமும், அண்டா-குண்டா போன்ற பரிசுப் பொருட்களையும் வாரி இறைத்த திமுக, அதிமுக கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறது.

அந்த வகையில், தற்போதுவரை தவெகவின் விஜய் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்த சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்போது வரை 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான நானி , தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், முதலில் சந்தேகிக்கப்பட்டார்; பின்னர் முடிசூட்டப்பட்டார்.இது நம் வீட்டில் நிகழ்ந்தது; இப்போது நம் அண்டை வீட்டிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதிர்பாராத ஒருவர் (Underdog) வெற்றி பெறுவது என்பது எப்போதுமே 'முழுமையான சினிமா' போன்றதுதான்.தங்கள் முடிவை மிகத் தெளிவாகத் தெரிவித்திருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு, இனிவரும் காலங்களில் சிறந்த நன்மைகள் விளையும் என்று நம்புகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com