''கிங்டம்'' படத்திற்கு அதிகரிக்கும் எதிர்ப்பு - சென்னை ஐகோர்ட்டில் வழக்கு


Growing opposition to the film Kingdom - Case in Chennai High Court
x

தமிழகத்தில் கிங்டம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள 'கிங்டம்' படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்ததை அடுத்து பாதுகாப்பு கோரி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ புரொடெக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

''தமிழ் ஈழ பிரச்சினை குறித்த உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்படவில்லை. படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும்'' என அந்த மனுவின் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது நாளை விசாரணை நடக்கிறது.

1 More update

Next Story