கையில் துப்பாக்கி... முகத்தில் ஆக்ரோஷம்!..சூர்யாவின் புதிய போஸ்டர் வைரல்

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த “சீன்” படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கையில் துப்பாக்கி... முகத்தில் ஆக்ரோஷம்!..சூர்யாவின் புதிய போஸ்டர் வைரல்
Published on: 

சென்னை,

இந்த போஸ்டரில், நடிகர் சூர்யா ஒரு உடைந்த மற்றும் கலைந்து கிடக்கும் அறையில் மர நாற்காலியின் மீது அமர்ந்தபடி, கையில் துப்பாக்கியுடன் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் மிடுக்கான தோற்றத்தில் காட்சி தருகிறார்.

சூர்யா 47

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியாக சூர்யா

‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

நவம்பர் 6-ந்தேதி ரிலீஸ்

சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளியாகும் ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தில் சூர்யா, டிஎஸ்பி இன்பராஜ் என்ற முற்றிலும் மாறுபட்ட, விசித்திரமான மற்றும் அதிரடி குணாதிசயங்கள் கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யாவின் 'மாஸ்' லுக்

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில், நடிகர் சூர்யா ஒரு உடைந்த மற்றும் கலைந்து கிடக்கும் அறையில் மர நாற்காலியின் மீது அமர்ந்தபடி, கையில் துப்பாக்கியுடன் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் மிடுக்கான தோற்றத்தில் காட்சி தருகிறார். நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் கூடிய அவரது இந்த முரட்டுத்தனமான 'மாஸ்' லுக், சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்களிடையே தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com