'வாடிவாசல்' படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்


GV Prakash gave an update on the movie Vadivasal
x
தினத்தந்தி 7 March 2025 9:43 AM IST (Updated: 19 March 2025 8:58 PM IST)
t-max-icont-min-icon

'வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.

சென்னை,

சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. இதனால் உடனே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ளார். அதன்படி, 'வாடிவாசல்' படத்திற்கான இசை பணிகளை தொடங்கியதாக புகைப்படத்தை பகிர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதனைத்தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தற்போது பங்கேற்று வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தப் பிறகு 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


1 More update

Next Story