சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் 2வது பாடல் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது.
சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் 2வது பாடல் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
Published on

சென்னை,

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார்.

சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவும், நவின் நூலி படத்தொகுப்பும் செய்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் 2வது பாடல் சூர்யா பிறந்தநாளன்று (ஜூலை 23ம் தேதி) வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் அறித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யா இப்பாடலை பாடியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com