ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து - சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு

ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து - சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர்.

கடந்த மாதம் இருவரும் ஒரே காரில் சென்னை குடும்ப நல கோர்ட்டிற்கு வந்து பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 25ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

தாங்கள் சேந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவிருந்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இசையமைப்பாளா ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கப்படுவதாக சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com